தாராள மனமுடையை நாடுகள் வரிசையில், உலகில் இலங்கை 9 ஆவது இடம், இந்தியா 69 ஆவது இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/11/2014 (புதன்கிழமை)
ஐக்கிய இராச்சியத்தை தளமாகக்கொண்டு இயங்கும் Charities Aid Foundation (CAF) என்னும் தன்னார்வ அமைப்பினால் தொகுக்கப்பட்ட இந்த வருடத்துக்கான தாராள மனமுடையை நாடுகள் வரிசையில் - World Giving Index (WGI) என்னும் பட்டியலில் இலங்கை 9 ஆவது இடத்தைப்.பெற்றுள்ளது.
கைவிடப்பட்டவர்களிற்கு உதவுதல் (Tendency of helping strangers), நன்கொடை வழங்குதல் (Donating money) மற்றும் ஊதியத்தை எதிர்பாராமல் சேவை செய்தல் (Volunteering) ஆகிய விடயங்களை அடிப்படியாகக் கொண்டே இந்த பட்டியல் வெளியிடப்படுள்ளது.
ஐக்கிய அமெரிக்கா (United States) மற்றும் மியன்மார் (Myanmar) ஆகிய 2 நாடுகளும் முதல் இடத்தில் உள்ளதுடன், கனடா 3 ஆவது இடத்தில் உள்ளது. New Zealand, Australia, Malaysia, Trinidad, Tobago ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளன.
இந்திய துணைக் கண்டத்தில் உள்ள பாகிஸ்தான் 61 ஆவது இடத்தையும், இந்தியா 69 ஆவது இடத்தையும், பங்களாதேஸ் 72 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.
கீழே உலக வரைபடத்தில் சகல நாடுகளும் பெற்ற வரிசை காட்டப்பட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.