கொரோனாவை வெற்றி கொண்ட நாடுகளில் இலங்கை 9 ஆவது இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2020 (வெள்ளிக்கிழமை)
கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்ட தலைவர்கள் பட்டியலில் இலங்கை 9வது இடம்
கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்கொண்ட தலைவர்கள் பட்டியலில் நியுசிலாந்து பிரதமர் ஜெர்சிண்டா ஆர்டன் முதலிடம் பிடித்துள்ளார்.
சிங்கப்பூர் , ஐஸ்லாந்து ,ஒஸ்ரியா , பின்லாந்து ,நோர்வே கனடா ,தென்கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் முதல் ஏழு இடங்களை பிடித்துள்ள அதேவேளை எட்டாம் இடத்தை ஹொங்கொங் நாட்டின் தலைவரும் 9 வது இடத்தை இலங்கையின் தலைவரும் பிடித்துள்ளனர்.
அவுஸ்ரேலியாவை தளமாக கொண்டு இயங்கும் ஐ சி எம் ஏ நிறுவனம் வெளியிட்டுள்ள தரப்பட்டியலில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய பிரதமருக்கு_38 வது இடமும் அமெரிக்க அதிபருக்கு_70 வது இடமும் பிரிட்டன் பிரதமருக்கு 88வது இடமும் இந்த பட்டியலில் கிடைத்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.