கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டுவரும் நாடுகளில் இலங்கை மற்றும் சீனா முன்னணியில் உள்ளதாக சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் சுகாதார கட்டமைப்பு மற்றும் முன்னாயத்த ஏற்பாடுகள் மிக சிறப்பானதாக அமைந்துள்ளதாகவும் புகழாரம் சூட்டுகின்றனர்.
பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள ஆய்வொன்றின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவின் தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் உயரிய மட்டத்தில் உள்ளது
அத்துடன் இன்று வரையில் இலங்கையின் மருத்துவ கட்டமைப்பு மற்றும் வைரஸை கட்டுப்படுத்த முன்னெடுக்கும் சுகாதார வேலைத்திட்டம் மிக உயரிய மட்டத்தில் இருப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.