Social Progress Index இலங்கை 88 ஆவது இடம், இந்தியா 101 ஆவது இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2015 (திங்கட்கிழமை)
அமெரிக்காவை தளமாகக்கொண்டு இயங்கும் “Social Progress Imperative Organisation” ஆய்வுசெய்து வெளியிட்டுள்ள இந்த வருடத்திற்கான உலக நாடுகளிற்கிடையிலேயான “சமூக வளர்ச்சி அளவு” (Social Progress Index) இல் இலங்கையானது அயல் நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானை பின்தள்ளி 88 ஆவது இடத்தை பெற்றுள்ளது. இந்த ஆய்வில் மொத்தம் 133 நாடுகள்
சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின் பிரகாரம் இலங்கை ஒப்பீட்டளவில் சிறந்த ஊட்டச்சத்து, சிறந்த மருத்துவப் பராமரிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளதுடன் தனிநபர் பாதுகாப்பு அலகில் முன்னேறுவதற்கு அதிக வாய்ப்பைப்பெற்றுள்ளதுடன் அடிப்படை அறிவைபெற்றுக்கொள்வதற்கும் அதிக வழியைப் பெற்றுள்ளது.
தனிநபர் சுதந்திரம் (Personal Freedom) மற்றும் தெரிவில் இலங்கை அதிக உறுதியாகவுள்ளபோதும் தனிநபர் அடைப்படை உரிமைகள் (Personal Rights) விடயத்தில் முன்னேறுவதற்கு அதிக இடம் உள்ளது குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுப்பட்டியலில் அயல்நாடுகளான பங்காளதேசம் 100 ஆவது இடத்தையும், இந்தியா 101 ஆவது இடத்தையும், பாகிஸ்தான் 122 ஆவது இடத்தையும், நேபாள் 98 ஆவது இடத்தையும், மற்றும் ஆப்கானிஸ்தான் 133 ஆவது இடத்தையும் அதாவது கடைசி இடத்தையும் பெற்றுள்ளன.
இதில் பூட்டான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.