மன்னாரிலிருந்து அரிச்சல்முனை சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 18/04/2015 (சனிக்கிழமை)
இலங்கையிலிருந்து தமிழகத்தின் தனுஷ்கோடிக்கு அருகில் அமைந்துள்ள அரிச்சல்முனைக்கு சட்டவிரோதமாக படகில் சென்றுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண் பிள்ளைகள் உட்பட்ட ஐவர் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரின் பேசாலை மீன்பிடிக் கிராமத்தைச் சேர்ந்த இந்த ஐவரும், படகு ஒன்றில் 25,000/- பணம்செலுத்தி, நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை அரிச்சல் முனையை அடைந்துள்ளனர். இவர்களை கரையில் விட்ட படகு பின்னர் திரும்பிச் சென்றுவிட்டது என தமிழக போலீசார் அறிவித்துள்ளனர். “தாம் இலங்கையில் வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்படுவதாயும், பிள்ளைகளின் கல்வியை மேற்கொண்டு தொடர முடியவில்லை என்றும் ஐவரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
அரிச்சல் முனையிலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியிலேயே இவர்கள் “Sections 3(a), read with 6(a) of the Passport (Entry into India) Rules, 1950 and section 14 of the Foreigners Act” கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். உள்ளூர் நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்ட இவர்கள், சென்னைக்கு கொண்டுசெல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளார்கள். சி.சத்தியசீலன் (56) மனைவி ச.பரமேஸ்வரி (45) மகள்கள் மேரி (19) அஞ்சலிதேவி (16) மற்றும் விடுதலைசெல்வி (14) என இவர்கள் போலீசாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
ஏற்கனவே 1996 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதியாக வந்துள்ள சத்தியசீலன் திருவண்ணாமலையில் உள்ள அதியண்டல் அகதிகள் முகாமில் இருந்து, பின்னர் 2000 ஆம் ஆண்டு தனது மகன் விடுதலைசெல்வன் மற்றும் மருமகள் காஞ்சனாவை இங்கேயே விட்டுவிட்டு மீண்டும் இலங்கை திரும்பியுள்ளதாயும் போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர். (The Hindu) .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.