வல்வையில் நடைபெற்ற வடமாகாண Teqball அங்குரார்ப்பணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2021 (சனிக்கிழமை)
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் 72வது விளையாட்டாக அறிமுகப்படுத்திய TeqBall முதல் தடவையாக வடமாகாணத்தில் அறிமுகப்படுத்தப்படடது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை சனிக்கிழமை காலை 9 மணிக்கு வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டு அரங்கில் நடைபெற்றது .
யாழ்மாவட்ட இணைப்பாளராக சிவா ஜீவிந்தன் அவர்களை இலங்கை ரெக்பந்தாட்ட சம்மேளனம் நியமித்துள்ளது. இவரது ஏற்பாட்டில் இந்நிகழ்வுக்கு இலங்கை ரெக் சங்கம் சார்பாக இலங்கைக்கான ரெக்பந்தாட்ட அபிவிருத்தி முகாமையாளர் சிவராஜா கோபிநாத் அவர்களும், சம்மேளனத்தின் உயர் அதிகாரிகளான திரு. ரஞ்சித்ஜெகமோகன் மற்றும் வைத்திய கலாநிதி. கணேசநாதன் ஆகியோரும் வருகைதந்து உபகரணங்களை கையளித்து, யாழ்மாவட்டத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.