இந்திய அரசிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய நாளான 15.09.1987 அன்று நீர், ஆகாரம் எதுவுமின்றி சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்போதைய அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு.திலீபன் (ராசையா பார்த்தீபன்) அவர்களின் நினைவேந்தல் இன்று வல்வெட்டித்துறையில் அனுஸ்டிக்கப்பட்டது.
வல்வை ஆலடிப் பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சதுக்கத்தில் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் திலீபனின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் தமிழகத்திலிருந்து யாழ் வந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீட்டைப் பார்க்க வந்திருந்த சிலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.