தொண்டைமானாறு தச்ச கொல்லை சித்தி விநாயகர் கோவில் வருடாந்த மகோற்சவம் இன்று 22.09.2020, திங்கட்கிழமை , கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று முற்பகல் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து கொடியேற்றம் சுமார் 11 மணியளவில் இடம்பெற்று விநாயகர் வெளிவீதியுலாவும் இடம்பெற்றது.
10 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவ திருவிழாவின் தீர்த்தத் திருவிழா 01.10.2020 வியாழக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
தச்ச கொல்லை சித்தி விநாயகர் கோவில், வல்வெட்டித்துறை - தொண்டைமானாறு வீதியில், தொண்டைமானாற்று சந்தியிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கீழே படங்களில் இன்று நடைபெற்ற கொடியேற்றத் திருவிழாவின் காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.