தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் சம்பியன்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/10/2019 (புதன்கிழமை)
சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியின் 90 ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு அழைக்கப்பட்ட 21 வயது பாடசாலை அணிகளுக்கு இடையிலான கரபந்தாட்ட போட்டியில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அணி சம்பியனாகியது.
இதன் இறுதியாட்டம் நேற்று (01) சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதியாட்டத்தில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அணியை எதிர்த்து புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணி மோதியது.
முதல் இரண்டு செற்களிலும் ஆதிக்கம் செலுத்திய தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அணி 25:21, 28:26 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்றாவது செற்றில் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணி 25:22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நான்காவது செற்றில் இரு அணிகளும் தொடர்ந்து பலப்பரீட்சை நடாத்தினர். இதில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அணி 25:23 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் 3:1 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.