தும்பளை தீபஜோதி வி.கழக மென்பந்தாட்ட இறுதிப்போட்டியில் நெடியகாடு இளைஞர் வி.கழகம் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/07/2014 (திங்கட்கிழமை)
தும்பளை தீபஜோதி விளையாட்டுக்கழகத்தினால் நடத்தப்பட்டு வந்த 10 பந்து பரிமாற்றத்தை கொண்ட மென்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று தும்பளை விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கலைமகள் விளையாட்டுக்கழகம் மோதியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கலைமகள் விளையாட்டுக்கழகம் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 89 ஓட்டங்களை பெற்றது. பந்து விச்சில் காந் 3 விக்கெட்டுக்களையும், சிலம்பரசன் 2 விக்கெட்டுக்களையும் எடுத்தார்கள்.
90 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் களம் புகுந்த வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் சார்பாக அதிக பட்சமாக விஸ்வரூபன் 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.