கனடா டொரோண்டோ ப்ளுஸ் பவுண்டேசன் ஆதரவில் தாயகத்தில் பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அண்மையில் மன்னாரில் ஒரு பாடசாலை முழுமையாக பெறுப்பேட்கப்பட்டு அதன் வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டட தொகுதிகள் பூர்த்தியாக்கப்பட்டு பாடசாலை கற்றல் உபகரணங்கள் முதலான சகல தேவைகளும் நிறைவேற்றப்பட்டன.
இதேபோல கேப்பபுலவிலும் ஒரு பாடசாலைக்கான வேலியமைத்தல் முதலான பணிகள் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அந்த பணிகள் செவ்வனே பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் வரும் 26ம் ,27ம் திகதிகளில் 1001 பலன் தரு மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட இருக்கின்றன.
மா, பலா, கமுகு, தென்னை உள்ளிட்ட இந்த மரங்களால் இன்னும் 5 வருடங்களில் பாடசாலைக்கென ஒரு நிரந்தர வருமானம் கிடைக்க உள்ளது. மழை காலத்தின் பின்னர் இந்த மரங்களை பராமரிக்கவென ஒரு பணியாளரும் நியமிக்கப்பட உள்ளார் என்பது மேலதிக தகவலாகும்.
இவை அனைத்தும் கனடாவில் உள்ள டொரோண்டோ ப்ளுஸ் பவுண்டேசன் ஆதரவில் நிறைவேற்றப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட இருக்கின்ற தாயகத்துக்கான திட்டங்களாகும்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.