இசை என்பது மொழிகளை கடந்தும் மனங்களை வசீகரிக்க கூடியது. அதனுடன் எம்மை எமக்குள்ளேயே புதுப்பித்து கொண்டிருக்கும் காதலும் இணைந்து ஏற்படும் வீச்சம் மயிலிறகால் மனதை வருடுவதுக்கு ஒப்பானது. அப்படி கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான ஆஷிக்கி 2 (Aashiqui 2) என்ற படத்தின் அனைத்துப் பாடல்களும் மிகவும் பிரபலம் பெற்றன. அதிலும், TUM HI HO என்கிற காதல் பாடல் காதலர்களின் தேசிய கீதமாகவே ஒலித்தது.
இந்த TUM HI HO என்ற பாடலை மிதுனின் இசையில் அர்ஜீத் சிங் பாடியிருந்தார். இப்பாடலை ஈழத்தில் இசை பற்றிய தேடலில் ஆர்வமுள்ள குக்கூ என்ற இளம் இசைஞர்கள் குழு தமிழ் வரிகள் கொடுத்து சிந்தூரி எனும் மெஸ்மரிச குரலில் மீளுருவாக்கம் செய்திருக்கிறார்கள்.
ஏற்கனவே வெற்றிபெற்ற பாடலொன்றை மீளுருவாக்கம் செய்யும்போது ஏற்படும் சிக்கல்களை வெற்றிகரமாக கையாண்டு அப்பட்டமான மீளுருவாக்கமாக இல்லாமல் மீளுருவாக்கத்திலும் புது இசை வடிவங்களை புகுத்தியுள்ளார்கள். இவர்களின் இந்த முயற்சி பாராட்டப்படக்கூடியது. மேலும் உந்துதல் அளிக்கப்பட்டு உயரத்துக்கு வரவேண்டியவர்கள். கீழே பார்த்து நீங்களும் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
மீளுருவாக்க இசை: அமல் ரோஷன்
பாடகி: சிந்தூரி கணேசலிங்கம்
பாடல் வரிகள் : மதுரகன் செல்வராஜா
கிட்டார் : துஷ்யந்தன் செல்வராஜா
வீணை : சரவண சுந்தரி முருகன்
இசைக்கோர்வை & இசைக்கலப்பு : விநாயகமூர்த்தி செந்தூரன்
உதவி : செந்தூரன் அண்ணா & துஷ்யந்தன் செல்வராஜா
தயாரிப்பு குழு : இரோஷன் புவிராஜ், ரமேஷ் யோகா, கனிஷ்கர் லக்ஷன் சிவகுமார், பிரசாத் ராஜேந்திரன்
இசை வெளியீடு: Cuckoo Music
காப்புரிமை : T series
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.