என்டர்பிரைஸ் சிறிலங்கா என்ற தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழான கண்காட்சி யாழ்ப்பாணம் கோட்டையில் எதிர்வரும் 7 அம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சியில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர 7 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கவுள்ளார். வடக்கின் பிரதான தொழில் துறையான விவசாயம் மற்றும் மீன் பிடி தொழில் துறையை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி திட்டங்கள் பலவற்றிற்கு இதன் கீழ் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இத் தொழில் துறைகளில் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான நிதி உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை மேலும் விரிவு படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சியில் அது தொடர்பான விபரங்களை புதிய தொழில் முயற்சியாளர்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.
தனியார் மற்றும் அசர தொழில் முயற்சியாளர்களைச் சார்ந்த 350 ற்கு மேற்பட்ட கண்காட்சிக்கூடங்கள் இதில் இடம்பெறவுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.