வைத்திலிங்கம் ஞாபகார்த்த சுழல் கிண்ண மென்பந்தாட்ட தொடர் இடம்பெறுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2016 (திங்கட்கிழமை)
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக முன்னால் உறுப்பினர் அமரர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்தமாக 2 வது வருடமாக நடாத்தும் சுழல் கிண்ண மென்பந்தாட்ட தொடர் நேற்று காலை ஆரம்பமாகியது.
முதலாவது போட்டி
முதல் போட்டியில் முதலில் ஆடிய றெயின்போ அணி 12 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 69 ஓட்டங்களை பெற்றது. றெயின்போ அணி சார்பாக ஜெகன் 18, பறீ 16 ஓட்டங்களை பெற்றனர். பந்து வீச்சில் இளங்கதிர் அணி சார்பாக சுதர்சன், பிரசாந் தலா 2 விக்கெட்டுகளை பெற்றனர்.
70 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இளங்கதிர் அணி 52 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இளங்கதிர் சார்பாக சிவா 18, பிரசாந் 8 ஓட்டங்களை பெற்றனர். றெயின்போ சார்பாக கபிலன் 3 விக்கெட்டுகளை பெற்று ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்
றெயின்போ அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
இளங்கதிர் அணி 12 ஓட்டங்களால் சைனிங்ஸ் அணியை வெற்றி கொண்டது .
இரண்டாவது போட்டி
நேற்றைய இரண்டாவது போட்டியில் முதலில் ஆடிய இளங்கதிர் அணி 12 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 75 ஓட்டங்களை பெற்றது. இளங்கதிர் சார்பாக விதுசன் 33 சிவா 11 ஓட்டங்களை பெற்றனர்.பந்துவீச்சில் சைனிங்ஸ் சார்பாக சஞ்சீவன், அன்பு தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
76 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய சைனிங்ஸ் அணி 63 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.சைனிங்ஸ் சார்பாக ரவி 26 பிரதீபன் 10 மேனகாந் 09 ஓட்டங்களை பெற்றனர். இளங்கதிர் சார்பாக சுஜீ ,கபில் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை இளங்கதிர் வீரன் விதுசன் பெற்றார்
இளங்கதிர் அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
மூன்றாவது போட்டி
மூன்றாவது போட்டியில் முதலில் ஆடிய சைனிங்ஸ் அணி 11 பந்துப்பரிமாற்றங்களில் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 46 ஓட்டங்களை பெற்றது. சைனிங்ஸ் சார்பாக துளசிராம் 30 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் றெயின்போ சார்பாக ருதேஷா, பிரணவன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
47 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய றெயின்போ 6 ஆவது ஓவரில் அணி 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. றெயின்போ சார்பாக ருதேஷா 34 ஓட்டங்களை பெற்றார். சைனிங்ஸ் சார்பாக பிரசாந் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதை றெயின்போ வீரன் ருதேஷா பெற்றார்
றெயின்போ அணி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
B பிரிவிலிருந்து றெயின்போ மற்றும் இளங்கதிர் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளளன.
போட்டியில் வெற்றிபெறும் முதலாம் இரண்டாம் அணிகள் வெற்றிக்கிண்ணத்துடன் தலா 6000 ரூபா, 3 000 ரூபாவைப் பெறவுள்ளன. போட்டிகளுக்கு First fresh food ltd (London) அனுசரணை வழங்குகின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.