அ.மி.த.க பாடசாலையில் நேற்று நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/02/2016 (வியாழக்கிழமை)
வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் நேற்று புதன்கிழமை பிற்பகல் 02.00 நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெற்றது.
சிறார்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் விருந்தினர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். பாடசாலை அதிபர் திரு.K.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இல்லமெய்வன்மை போட்டிக்கு பிரதம விருந்தினராக சி.புஸ்பலிங்கம் (பிரதிக்கல்விப் பணிப்பாளர், கல்வி முகாமைத்துவம்) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். மங்கள விளக்கேற்றல், கொடியேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் பாடசாலைக் கீதத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது.
இவ் விளையாட்டுப்போட்டியில் ஆண்கள், பெண்களுக்கான அணிநடையினைத் தொடர்ந்து சிறார்களின் ஓட்டம், தடைதாண்டல், இல்ல அஞ்சலோட்டம், சிறுவர்கள் விளையாட்டு போன்ற விளையாட்டுக்களுடன் பழைய மாணவர்களுக்கான ஓட்டம், பெற்றோர்களிற்கான ஓட்டம் என்பனவும் நடைபெற்றிருந்தன.
விளையாட்டுக்களின் முக்கிய நிகழ்வாக சிறார்களின் இசையும் அசைவும், வினோத உடைப் போட்டியும் நடைபெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அ.மி.த.க பாடசாலையில் நேற்று நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் - பகுதி -1Valvai American Mission Tamil Mixed...
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.