லண்டனில் வல்வை புளூஸ் வி.க 23 ஆவது வருடாந்த மெய்வல்லுனர் போட்டிகள் எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 23/07/2014 (புதன்கிழமை)
வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தால் வருடா வருடம் நடாத்தப்படும் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 03/08/2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
இதுவரை காலமும் தொடர்ச்சியாக Tooting Bec என்னும் இடத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தப் போட்டிகள் இம்முறை புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
London Borough of Sutton, Rose Hill என்னும் இடத்தில் உள்ள David Weir Leisure Center -Athletic Track ல் 03/08/2014 ஞாயிற்றுக்கிழமை மேற்படி போட்டிகள் நடைபெறவுள்ளது.
David Weir Leisure Centre
Middleton Road
Carshalton
SM5 1SL
காலம்: 03/08/2014 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மதியம் 12.00 --- மாலை 6.00 மணி வரை
சகல வசதிகளும் கொண்ட மிகவும் பிரபல்யமான இந்தப் புதிய மைதானத்தில், இந்த வருடம் புளூஸ் விளையாட்டுக் கழக மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெறுவது சற்று வித்தியாசமானதாகவும், அதே சமயம் கழக மெய்வல்லுனர் போட்டிகளின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான ஒரு புது அத்தியாயமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
போட்டிகள் நடைபெறப்போகும் புதிய மைதானத்தின் படங்களை கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.