ரேவடி வி.கழக கரப்பந்தாட்டம் (volly ball Over Game)- தீருவில் வி.கழகம் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/08/2014 (வியாழக்கிழமை)
வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் வல்வைக்கு உட்ப்பட கழகங்களுக்கிடையே நடாத்தப்பட்ட 5 நபர் பங்கு பெரும் கரப்பந்தாட்ட போட்டிகள் (volly ball Over Game) நேற்று மாலை வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இந்த கரப்பந்தாட்ட போட்டியில் வல்வைக்கு உட்பட்ட கழகங்களான வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம், வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகம், வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழக Aஅணி, வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழக B அணி, வல்வை சைனிங்ன்ஸ் விளையாட்டுக்கழக Aஅணி, வல்வை சைனிங்ன்ஸ் விளையாட்டுக்கழக Bஅணி, வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் ,மற்றும் வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகம் ஆகிய கழகங்கள் பங்கு பற்றியிருந்தன.
இறுதி போட்டியில் வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகம் மோதியது.இந்த ஆட்டத்தில் வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.