வல்வை விளையாட்டுக் கழகம் தனது 60வது ஆண்டு விழாவினை முன்னிட்டு, எமது கழகத்தின் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் 09 நபர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி வெகு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
இதில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள அணிகளை மாத்திரமே பங்குபற்ற அனுமதிக்கப்படவுள்ள காரணத்தினால் தயவு செய்து உங்கள் பதிவுகளை 25.10.2019 வெள்ளிக்கிழமைக்கு முன் (நாளையதினம்) உங்கள் அணிகளின் விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து நேரடியாகவோ அல்லது கீழ் இணைக்கப்பட்டுள்ள தபால் முகவரி மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பரிசுப் பெறுமதிகள்;
@. 01ம் பரிசு 300,000 பணப்பரிசு மற்றும் வெற்றிக்கேடயம்
@. 02ம் பரிசு 200,000 பணப்பரிசு மற்றும் வெற்றிக்கேடயம்.
@. 03ம் பரிசு 100,000 பணப்பரிசு மற்றும் வெற்றிக்கேடயம்.
@. 04ம் பரிசு 50,000 பணப்பரிசு மற்றும் வெற்றிக்கேடயம்.
@. ஆட்ட நாயகன் விருது (அனைத்து போட்டிகளுக்கும்)
@. தொடர் ஆட்ட நாயகன் விருது.
@. சிறந்த கோல்க் காப்பாளர் விருது
@. சிறந்த பின்கள வீரர் விருது
@. நன்நடத்தை அணி விருது
@. வளர்ந்து வரும் வீரர் விருது
@. அனுபவ வீரர் விருது
எமது தபால் முகவரி;
தலைவர்/செயலாளர்,
வல்வை விளையாட்டுக் கழகம்,
வல்வெட்டித்துறை.
இச் சுற்றுத் தொடர் தொடர்பான மேலதிக விபரங்கள் தேவைப்படின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்;
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.