ஸ்ரீ சித்தி விநாயகர் பூலட்சுமி, மகாலட்சுமி சமேத நாராயண சுவாமி திருக்கோவில் 5 நாள் உற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2015 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டி வேவில் கலட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் பூலட்சுமி, மகாலட்சுமி சமேத நாராயண சுவாமி திருக்கோவில் வருடாந்த மகோற்சவம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
10 தினங்கள் நடைபெறவுள்ள மகோற்சவத்தின் தேர் திருவிழா வரும் திங்கட்கிழமை அன்று முற்பகல் 10 மணிக்கும், தீர்த்தத் திருவிழா செவ்வாய் கிழமை காலை 07.30 மணிக்கு வல்வை ஊரணி இந்து சமுத்திரத்திலும் நடைபெறவுள்ளது.
வல்வெட்டி வேவில் கலட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் பூலட்சுமி, மகாலட்சுமி சமேத நாராயண சுவாமி திருக்கோவிலானது வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து சுமார் 850M தொலைவிலும், வேவில் பிள்ளையார் ஆலயத்தின் தென்மேற்கு திசையிலும் அமைந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.