ஆதிசக்தி உதைபந்து நிறைவு, ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர் பங்கேற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 18/02/2019 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டுகழகம் நடாத்திய மாவட்ட ரீதியிலான 9 பேர் கொண்ட உதைப்ந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி நேற்று மாலை சிதம்பர கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் கொற்றாவத்தை ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகம் மோதியது.
இறுதியாட்டத்தில் விண்மீன் விளையாட்டுகழக 1:0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை சூடிக்கொண்டது றேஞ்சர்ஸ் விளையாட்டுகழகம்.
விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியை பார்க்கவென ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் மைதானத்தைச் சுற்றி நிரம்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டுகழகம் நடாத்திய மாவட்ட ரீதியிலான 9 பேர் கொண்ட உதைப்ந்தாட்ட தொடரில் இறுதியாட்டத்தில் விண்மீன் அனியை 1:0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சம்பியன் பட்டம் சூடிக்கொண்ட றேஞ்சர்ஸ் வி.க மற்றும் அத்தொடரில் மூன்றாமிடத்தை பெற்றுகொண்ட டயமண்டஸ் வி.க .. வடமராட்சி பிரதேசத்திற்கான அழைக்கபட்ட கழகங்கள் தொடரில் சம்பியன் பட்டம் பெற்றுகொண்ட மனோகரா வி.க அத்தொடரில் இரண்டாமிடம் பெற்றுகொண்ட யங்கம்பன்ஸ் வி.க ஆகிய எமது அங்கத்துவ கழகங்களை வாழ்த்துகின்றோம்...
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.