யாழ்மாவட்டத்தின் சிறந்த பாற்பசுப் பண்ணையாளராக வல்வையை சேர்ந்த திரு.ரவி தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/01/2015 (வியாழக்கிழமை)
யாழ்மாவட்டத்தின் சிறந்த பாற்பசுப் பண்ணையாளராக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு.நாகேஸ்வரன் ரவி அவர்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டு கடந்த 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற உழவர் பெருவிழாவில் விருதுகள் மற்றும் பணப்பரிசும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
வடக்கின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தையொட்டி உழவர் பெருவிழாவை நடாத்தி வருகிறது.
திரு.ரவி அவர்கள் இதற்கு முன்னரும் 2012 ம் ஆண்டுக்கான யாழ்மாவட்டத்தின் சிறந்த கால்நடை வளர்ப்பாளராக வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை மானாங்கானையில் உள்ள இவரது பண்ணியல் 25ற்கு மேற்ப்பட்ட பசுக்களை வளர்த்துவருவதோடு, அவற்றிக்கான தீவணங்களை இயற்கை முறையில் தயாரித்து வருகிறார். இதற்காக தனது தோட்டத்தில் புற்களை பெருமளவில் வளர்த்து வருகின்றார்.
உழவர் பெருவிழாவில் வடக்கு மாகாண முதலமைச்சரால் விருது வழங்கப்படும் பொழுது
2012 ஆம் ஆண்டு சிறந்த கால்நடை வளர்ப்பாளராக தெரிவுசெய்யப்பட்ட ரவி வல்வையில் கெளரவிற்கப்பட்டபொழுது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
rajkumar periyathamby (canada)
Posted Date: January 30, 2015 at 11:18
ravi annaa avarkalukku vaazhthukkal
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.