வல்வை நலன்புரி சங்கம் – கனடா ( டொரோண்டோ ) இன் 30 ஆவது வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் ஜூலை திங்கள் 13 நாள் வழமையான சிறப்புகளோடு Downsview Dells Park, Picnic Areas 3 & 4 (1651 Sheppard Ave W, Toronto, M3M 2X4, ON, Canada ) இல் காலை 10 மணியளவில் ஆரம்பமாகி நடைபெறும்.
வல்வையர்கள் அனைவரும் ஒன்று கூடி சந்தித்து களித்திருக்கும் நாள் இது. இது 30 வது ஒன்றுகூடலாக இருப்பாதால் இன்னும் சிறப்பான விடயங்கள் பலவற்றையும் எதிர்பார்க்க கூடியதாக இருக்கும்.
வெளிநாடுகளில் இருந்து கனடாவுக்கு கோடை கால விருந்தினர்களாக வருகின்றவர்களும், இந்த நாட்களில் நீங்கள் வருகை தந்தால் எங்கள் ஒன்றுகூடளிலும் கலந்து கொள்ள முடியும் என்பதால். இந்த காலத்தில் உங்கள் கனடா வருகையை திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
அனைவரும் அன்றைய நாளில் ஒன்று கூடுவதுடன், கனடா – வல்வை நலன்புரிச்சங்க அங்கத்துவ பணம் செலுத்தாதவர்கள் அன்றைய நாளிலேயே அதனை செலுத்த முடியும் என்பதையும் மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
இதேவேளை வருடாந்தம் டொரோண்டோ புளூஸால் நடாத்தப்படும் மாவீரர்கள் ஞாபகார்த்த மின்னொளியில் நடைபெறும் தியாக தீபங்கள் உதைப்பாந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 24 நாள் நடைபெறும் என டொராண்ரோ புளூஸ் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஒன்று கூடல் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.