லண்டன் வல்வை புளூஸ் நண்பர்களின் அனுசரணையுடன் வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் இன்று மாலை வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இன்றைய போட்டியில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்டத்தில் 2 :1 என்ற கோல் கணக்கில் ஆதிசக்தி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இச்சுற்றுத் தொடரின்
ஆட்டநாயகன் - பிரபாகரன் ஆதிசக்தி விளையாட்டுக்கழகம்
தொடர் நாயகன் - சண்முகதாஸ் ஆதிசக்தி விளையாட்டுக்கழகம்
சிறந்த கோல்காப்பாளர் - ஜெயபாலன் ஆதிசக்தி விளையாட்டுக்கழகம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.