வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கமானது தொடர்ச்சியாக 5 ஆவது ஆண்டாக நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டிகள் நேற்று வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில்நடைபெற்றன.
இறுதி ஆட்டத்தில் இளங்கதிர்A அணியினை எதிர்த்து சைனிங்ஸ்A அணி மோதியது. இப்போட்டியில் இளங்கதிர்A அணியானது 4-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.
நேற்றைய போட்டியின் ஆட்டநாயகன் :− கபில்ராஜ்(இளங்கதிர்)
தொடராட்ட நாயகன் :− பிரசாந்(சைனிங்ஸ்)
சிறந்த கோல்காப்பாளர் :− கஜிதரன்( இளங்கதிர்)
சிறந்த பின்கள வீரர் :− விதுஷன்(இளங்கதிர்)
இரண்டாமிடத்தினை சைனிங்ஸ்A அணியும், மூன்றாமிடத்தினை ரேவடி A அணியும் பெற்றுக் கொண்டது.
முதலாம் இடத்தினைப் பெற்ற இளங்கதிர்A அணிக்கு 20,000/- ரூபா பணப்பரிசிலுடன் வெற்றி கிண்ணமும், இரண்டாமிடத்தினை பெற்றுக் கொண்ட சைனிங்ஸ்A அணிக்கு 15000ரூபா பணப்பரிசிலும் வெற்றிக்கிண்ணமும், மூன்றமிடத்தினை பெற்றுக்கொண்ட ரேவடி A அணிக்கு 5000 ரூபா பணப்பரிசிலும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இத்துடன் பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிகளும் நடைபெற்றன. இறுதிப்போட்டியில் உதயசூரியன் அணியை எதிர்த்து நேதாஜி அணி மோதியது. ஆட்டத்தில் 10:8 என்ற கோல் கணக்கில் உதயசூரியன் அணி வெற்றி பெற்று சம்பியனானது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.