போதைப்பொருள் பாவனை, போதைப்பொருளுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் 26 ஆம் திகதி சர்வதேச நிகழ்வு இடம்பெறுகிறது.
இந்த தினத்தை தொனிப்பொருளாக கொண்டு ஜனாதிபதி பணியாளர் செயலணியினால் ஜுன் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் ஜுலை மாதம் முதலாம் திகதி வரையான ஒரு வாரக்காலம் போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தெளிவுப்படுத்தும் விஷேட வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டடிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக மதுசாரம், புகைத்தல் ஆகியவற்றை சமூகத்தில் இருந்து இல்லாதொழிப்பது தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.