அமரர் நடராசா வைத்திலிங்கம் ஞாபகார்த்த கடற்கரை உதைபந்து - நேதாஜி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2019 (புதன்கிழமை)
அமரர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினர் மற்றும் First fresh food ltd (லண்டன்) ஆகியோரின் அனுசரணையுடன், சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வல்வைக்குட்பட்ட கழகங்களிடையேயான கடற்கரை காற்பந்தாட்ட தொடர் நேற்று வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் சைனிங்ஸ் A அணியை எதிர் நேதாஜி அணி மோதியது.கோல் எதனையும் பெறாது ஆட்டம் 0:0 என சமனிலையில் முடிவுற்றது. அதைத் தொடர்ந்து சமனிலை தவிர்ப்பு உதையில் 2 : 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நேதாஜி அணி சம்பியனாகியது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.