வல்வெட்டித்துறையின் ஊரிக்காடு, மயிலியதனை, வண்ணாத்திமணல் போன்ற இடங்களில் புகையிலை நாத்து மேடைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2012 (சனிக்கிழமை)
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வடமராட்சியின் பல பகுதியில் புகையிலை நாத்து மேடைகள் அமைக்கும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையின் ஊரிக்காடு, மயிலியதனை, வண்ணாத்திமணல் போன்ற இடங்களில் நாத்து மேடைகள் ஆரம்பிப்பதை படங்களில் காணலாம். இந்த புகையிலை நாத்து மேடைகள் கடலை அண்டிய பகுதிகளில் மட்டும் அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 2 - 3 வாரங்களில் நாத்து மேடையிலிருந்து விளையும் சிறு புகையிலைக் கன்றுகள் யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளுக்கு பயிரிடுவதற்கு விற்கப்படும்.
அளவில் குறைவாகினும், வல்வெட்டித்துறை பிரதேசத்தின் வருமானங்களில் இப் புகையிலைக் கன்றுகளின் விற்பனையும் ஒன்றாகும்.
யாழ் மாவட்டத்தின் மிகக் குறிப்பிடத்தக்க ஏற்றுமதியில், புகையிலையும் முன்னணி வகிக்கின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.