மட்/முறுத்தானை ஸ்ரீமுருகன் வித்தியாலயத்திற்கு வல்வை 21 நண்பர்கள் கற்றல் உபகரணங்களை கடந்த வெள்ளிக்கிழமை அன்று வழ்ங்கியிருந்தார்.
இது சம்பந்தமாக வல்வை 21 நண்பர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு
எம்மவர்க்காய் இணைவோம்
எமது "வல்வை 21 நண்பர்கள்" குழுமம் சார்பாக மட்டக்களப்பில் அதிகஷ்ட பிரதேசமான முறுத்தானை பிரதேசத்தில் உள்ள பாடசாலையான மட்/முறுத்தானை ஸ்ரீமுருகன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை கடந்த வெள்ளிக்கிழமை (03/01/2020) வழங்கியிருந்தோம்.
குறித்த பாடசாலையின் மாணவர்களின் பின்தங்கிய நிலை குறித்து எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, அதனை உறுதிப்படுத்திய பின்னர் குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாம் நேரடியாக சென்று வழங்க முடியாத சூழ்நிலையில், நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இதனை எமது சார்பில் மாணவர்களுக்கு வழங்கிய திரு.K.குககுமாரராஜா அவர்களுக்கு வல்வை 21 நண்பர்கள் சார்பில் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எங்கள் எதிர்காலச் சந்ததியினர்க்கு, அவர்கள் சிறப்பான சூழலில் கல்வி கற்பதை உறுதிப்படுத்தி அவர்களை எங்கள் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய சிறந்த மக்கள் சேவகர்களாக உருவாக்க வேண்டிய கடமைப்பாடு எங்கள் அனைவருக்கும் உள்ளது. அதனடிப்படையிலேயே எங்களது தற்போதைய செயற்பாடுகள் பின்தங்கிய பாடசாலைகள் மற்றும் மாணவர்கள் நோக்கியதாகவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.