பட்டப் போட்டித் திருவிழா - வல்வை விக்னேஸ்வரா சன சமூக நிலையம்
வல்வை விக்னேஸ்வரா சன சமூக நிலையமும் வல்வை உதயசூரியன் கழகமும் இணைந்து நடாத்தப்படும் மாபெரும் வினோத விசித்திர பட்டப்போட்டியினை இந்த வருடம் மிகச் சிறப்பாக நடாத்த தீர்மானித்துள்ளோம்...
வல்வெட்டித்துறையின் பெருமையினை அனைத்துலக மக்களுக்கும் வியந்துபார்க்க தக்கவகையிலான பட்டப்போட்டியினை சிறப்பாக நடாத்த உதவும் எமது பட்டம் கட்டும் வல்லுனர்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு இந்த பட்டப்போட்டியினை 2011 ல் ஆரம்பித்து வைத்து அதனை வருடாந்தம் நடாத்திவரும் வல்வை விக்னேஸ்வரா சன சமூக நிலைய தலைவர்,செயலாளர்,பொருளாளர் முறையே ........
பட்டப்போட்டியினை ஆரம்பித்து வைத்த நிர்வாகம்
தலைவர்-ஜெகதீஸ்
செயலாளர் - திருக்குமரன்
பொருளாளர்-வாமனன்
⚡⚡2012
தலைவர் -ஜெகதீஸ்,செயலாளர்-திருக்குமரன், பொருளாளர்-வாமனன்
⚡⚡2013
தலைவர் -தேவசிகாமனி,செயலாளர்-சந்திரகுமார்,பொருளாளர் -உதயகுமார்
தலைவர் - கவிச்செல்வன், செயலாளர்- திருக்குமரன்,பொருளாளர் - குகேந்திரன்
⚡⚡2020- இந்த வருடம்
தலைவர் -சிவமயம்,
செயலாளர்-சிவகணேஸ்
பொருளாளர் - உதயகுமார்..
இந்தாண்டின் 10வது ஆண்டின் அகவையில் கால்பதிப்பதினை முன்னிட்டு மிகச்சிறப்பான முறையில் இந்தவருடம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது ...அனைத்து மக்களும் வருகை தந்து பட்டக்கலைஞர்களின் திறமைகளை கொண்டு உருவான விசித்திர பட்டங்களை வானத்தில் கண்டு வியப்பீர்களாக!
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.