மு/ஆலங்குளம் அ.த.க பாடசாலைக்கு உதயசூரியன் கழகம் கற்றல் உபகரணங்கள் வழங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/02/2020 (வெள்ளிக்கிழமை)
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆழம் குளம் எனும் கிராமத்தில் ஆலங்குளம் அ.த.க பாடசாலைக்கு வல்வை உதயசூரியன் கழகத்தின் ஊடாக கல்வி பயில்கின்ற 16 மாணவர்களுக்கு தலா ரூபா 2000/- பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடை வழங்கப்பட்டது.
அத்துடன் வல்வையின் பாரம்பரிய உணவான எள்ளுப்பாகு அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்த மாணவர்களுக்கான அன்பளிப்பினை வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கு கழகத்தைச் சேர்ந்த க.ஆனந்தசிகாமணி அவர்கள் வழங்கியிருந்தார். கழகத்தின் தலைவர் மு.ஜெயதரன் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
மேலும் இப்பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் முற்றம் அமைப்பதற்கும் உதவி செய்யவுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.