வல்வெட்டித்துறை மக்களுக்கு ஒரு காலத்தின் வாசப்பூ நீயடா - சோ.செ .தெய்வச்சந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/10/2020 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை மக்களுக்கு ஒரு காலத்தின் வாசப்பூ நீயடா
நண்பா நீ தாய் வயிற்றில் கருக்கொண்ட காலத்தில் உன் வாழ்வு முழவதும் பதிவு செய்யப்பட்டதுதான். சிதம்பராவின் பள்ளித் தோழனாக கிரேக்ககப்பல் ரேட் அன் ரான்ஸ்போட் கம்பனியில் என் மாலுமி நண்பனாகவும் மற்றைய 1953க்கு முன் பின் பிறந்த நட்பு குழக்களில் என்னுடன் கூடத்தூரம் பயணப்பட்டவன் நீயடா. எமது நட்பு வட்டத்தில் உதைபந்தாட்டம் கைப்பந்தாட்டம் மைதானவிளையாட்டுக்கள் என்று சகல விளையாட்டுககளிலும் எம் நட்பு வட்டத்தில் பிரபலமாவவன் நீயடா.
எமது நட்பு 1954 1953 1952 வட்டம் அழகான வல்வெட்டித்துறை வரலாற்றில்
வல்வெட்டித்துறையின் பிரதான கோயிலின் பிரத குருவாக அம்மன் கோயில் மணியமாக கடலோடிகளில் பலர் கப்பல் தலைவன்களாக இயந்திரவியளார்களாக
இரத்த கொடை வள்ளல்களாக சமாதான நீதவானாக நாடக கலைஞர்களாக மாவீரர்களாக புகைப்பட வீடியோ கலைஞனாக கனடாவில் யோகசன ஆசானாக உன்னைப்போல் வல்வெட்டித்துறையின் வரலாற்றை அலங்கரித்தவர்கள்.
எமது நட்பு வட்டத்தில முதல் பயணப்பட்டவர்களின் வரிசையில் வந்து விட்டாய்.
புலம்பெயர் தேசத்து வாழ்வியலும் இன்றைய கொரனாவின் விரட்டலும் பின் வரிசையில்தான் நிற்கின்றோம். எமது சிதம்பராவின் வெற்றிகளிலும் இன்றைய மூத்த விளையாடடு விற்பன்னர்களுடன் பயணப்பட்டு பத்திரிகை செய்தியாக புகைப்பட பிரதிகளாக வல்வெட்டித்துறை வரலாற்றில உன்னை பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.
எம் நட்பு வட்டததின் இனிய நண்பனாக சிரித்த முகத்துடன் ஒரு நல்ல பண்பாளனாக தொடர்நது பயணித்துக்கொண்டு இருப்பாய்.
எம் நட்பு வட்டம் உன் ஆத்ம சாந்திக்கு பிராத்திக்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.