Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வல்வையில் 1720ஆம் ஆண்டில் கட்டப்பட்ட புனித செபஸ்தியார் தேவாலயத்தின் (ST.SEBASTIAN'S CHURCH) - இன்றைய நிலை

பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2013 (சனிக்கிழமை)

வல்வையில் 1720ஆம் ஆண்டில் கட்டப்பட்ட புனித செபஸ்தியார் தேவாலயம் (ST.SEBASTIAN`S CHURCH).

இது எமது வல்வையின் வரலாற்றுப் புனிதம்! இது எமது வல்வையின் புராதனச் சின்னம்!!

இந்தப் பாரம்பரியம் மிக்க தேவாலயத்தின் இன்றைய நிலை என்ன?
 
அன்பான வல்வை மக்களே !

கிட்டத்தட்ட முன்னூறு (300) ஆண்டு கால வரலாற்றை தொடப்போகும் எம்மூர் தேவாலயத்தின் இன்றைய நிலை என்னவென்று சமீபத்தில் வல்வையின் இணையங்களில் வெளியான புகைப்படங்களில் காண நேர்ந்தது. ஏன்? நீங்களும் கூட இதைப்  பார்த்திருப்பீர்கள்! வல்வையின் இந்தப்  புராதனச்சின்னம், தனது கம்பீரமான அழகை இழந்து, உருக்குலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தான் பெரும் சோகம்!!
 
வல்வையில் வாழும் ஒரு சிறிய கிறிஸ்தவ சமூகத்தினருக்கு மட்டும் தான்,  இந்தத் தேவாலயம் என்றில்லை. இது ஒட்டு மொத்த வல்வை மக்களுக்குமானது.
 
ஆனால் இதுவரை காலமும், நாம் தான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தவறியிருக்கிறோம் என்பது தான் உண்மை!!! காலம் காலமாக நாம், எங்கள் இந்துக் கோவில்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து அவற்றையே பராமரித்தும் வந்துள்ளோம். அதே அக்கறையை நாம்  இந்தத் தேவாலயத்தின் மீதும் செலுத்தியிருந்திருக்கவேண்டும். அப்படிச் செலுத்தியிருந்தால் இன்றைய சோக நிலை தவிர்க்கப்பட்டிருக்கும்.
 
உலகம் முழுக்க பரந்து வாழும் வல்வை மக்களாகிய நாம் நினைத்தால் இந்தப் புனிதத் தேவாலயத்தைச்  சீர்படுத்தி, அதன் அழகை மெருகூட்டிப் பாதுகாக்கலாம்.  பொதுவாக பழைய கட்டிடங்கள், ஒரு சில கால இடைவெளிகளில் சீர் செய்து பாதுகாத்தால் தான், அதன் தனித்தன்மையோடும் வலிமையோடும் மேலும் அதிக ஆண்டுகள் நிலைத்து நிற்கும். ஆனால் இந்தத் தேவாலயத்துக்கு அப்படிப்பட்ட வேலைகள் நடந்து ஆண்டுகள் பல கடந்துவிட்டது.
 
தவிரவும், நடந்து முடிந்த யுத்தம் காரணமாகவும் பெரும் சேதம் ஏற்பட்டு, உருக்குலையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது தேவாலயம். கதவு, யன்னல், தளபாடம், தேவாலயமணி உட்பட அனைத்தும் சீரழிந்து கிடக்கின்றன.
 
இதன் புனரமைப்பு வேலைகள் சம்பந்தமாக திரு.குலநாயகம் மற்றும் திரு.அகமணிதேவர் ஆகியோருடன் கடந்த 13/01/2013 இல் தொலைபேசியில் பேசியிருந்தேன். அவர்கள் அதனை மிகவும் விருப்பத்தோடு வரவேற்றார்கள். தமக்கு கிடைத்த சிறிய சிறிய  உதவிகளுடாக  தேவாலய உட்புற வேலைகள் சிலவற்றை முடித்து விட்டதாகவும், இன்னும் வெளி வேலைகளுடன்  கதவு,யன்னல், தளபாடம் மற்றும் பெயிண்டிங் என மிகுதி வேலைகளுக்கு நிதி இல்லாமையால் தொடரமுடியாமல் இருப்பதாகவும் கூறினார்கள்.
 
இந்தத் திருப்பணிக்கு, வல்வையர் நாம் எல்லோரும் இணைந்து செயற்பட்டால் போதியளவு நிதியை தந்து உதவலாம். எம்மூரில் உள்ள இந்துக்கோவில்களுக்கு நாம் விரும்பி எவ்வளவு வேலைகளைச் செய்கிறோமோ,அதே போல இதுவும் எங்கள் கோவில் தானே என நினைத்து செயற்பட்டால் இந்தப் புராதனச் சின்னத்தைக் காப்பாற்றி அழகு பார்க்கலாம். கிறிஸ்தவ நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு, இங்குள்ள தேவாலயங்களின் அழகும்,அவற்றின் தனித்தன்மையும் நன்றாகப்புரியும். ஒவ்வொரு வருடமும் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வார காலம் முன்பே கொண்டாட்டம் களைகட்ட ஆரம்பித்துவிடும்.
 
ஆனால் எங்கள் ஊரில் உள்ள இந்தப் புனித தேவாலயத்தின் நிலையைப்பாருங்கள்! நாமும் ஏன் வெகு  சிறப்பாக கிறிஸ்தமஸ் விழாவை  கொண்டாடக் கூடாது? அங்குள்ள ஒரு சிறிய கிறிஸ்தவ சமூகத்தினருடன் சேர்ந்து  ஒட்டு மொத்த வல்வை மக்களுக்குமான கிறிஸ்மஸ் விழாவாகக் கொண்டாடி மகிழ வேண்டும். புனித செபஸ்தியாரின் அருள் வல்வெட்டித்துறைக்கு கிடைக்கவேண்டும்!
 
கூடிய விரைவில் தேவாலயத்தைப் புனரமைத்துக் கொண்டு,
 
இனி வரும் காலங்களில் வல்வையில் கிறிஸ்தமஸ் விழாவுக்கும்  அதிக முக்கியத்துவம் கொடுக்க நாம் முன்வரவேண்டும்.

நாம் மனம் வைத்தால் எதுவும் சாத்தியமே!
 
முதற்கட்டமாக, லண்டனில் உள்ள வல்வை நலன்புரிசங்கத்தினர், இந்தத் தேவாலய திருப்பணி வேலைகளுக்கு வல்வையில் உள்ள வல்வை ஒன்றியம் மூலமாக தமக்கு தெரியப்படுத்தினால், தாம் அதைப் பரிசீலித்து ஆவன செய்வோம் என சங்கத்தலைவர் திரு.உதயணன் அவர்கள் என்னிடம் கூறியுள்ளார். இது மிகவும் வரவேற்கத்தக்க விடயம். அவர்களுக்கும் சங்க நிர்வாகத்தினருக்கும் மிக்க நன்றி! அவர்களின் பணிகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்!!
 
இதே போல ஏனைய நாடுகளில் உள்ள வல்வை நலன்புரிச்சங்கத்தினரும் , மற்றும் வல்வையின் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வமுள்ளவர்களும், தொழிலதிபர்களும் மற்றும் ஏனைய வல்வையரும் சேர்ந்து  இந்தப்பணியும் எங்கள் ஊரின் முக்கிய பணி என முன்வந்து உதவுவார்கள் என்ற பெரும்  நம்பிக்கையுடன்.
 
நன்றி,
அன்புடன்
கு .பிறேம்குமார் (கே.பி)
 
கிறிஸ்தவ தேவாலய புனருத்தாரண விபரம் குறித்து புனித செபஸ்தியார் தேவாலய நிர்வாகத்தினரின் அறிக்கை எமது இணைய தள முகவரியில்  இணைக்கப்பட்டுள்ளது.
 

 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
மரண அறிவித்தல் - பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2024 (சனிக்கிழமை)
சற்குணராஜா நிமலன் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2024 (வியாழக்கிழமை)
அமரர் திரு அம்பிகைபாகர் வேதவனம் - ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2024 (செவ்வாய்க்கிழமை)
இன்றைய நாளில் – உள்நாட்டு யுத்தத்தின் முதலாவது இராணுவ நடவடிக்கை 'ஒபரேஷன் லிபரேஷன்'
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஊரணி வைத்தியசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/05/2024 (சனிக்கிழமை)
புதிய மருத்துவ பீட வாளாகம் திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2024 (வெள்ளிக்கிழமை)
முன்னாள் நகரசபை செயலரின் மகள் விபத்தில் மரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2024 (வெள்ளிக்கிழமை)
வங்காள விரிகுடாவில் புயலுக்கு ரிமல் எனப் பெயர்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2024 (வியாழக்கிழமை)
வாங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2024 (செவ்வாய்க்கிழமை)
ஊரணி மயானம் சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கடற்கரை சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2024 (சனிக்கிழமை)
15 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2024 (சனிக்கிழமை)
A/L (2026) புதிய வகுப்புகள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2024 (சனிக்கிழமை)
கடலுக்குள் நடத்தப்பட்ட கையிறிழுத்தல் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2024 (வெள்ளிக்கிழமை)
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முதல்தடவையாக வீர வணக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
ஆழமான கருத்தைக்கூறும் கார்ட்டூன்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
முள்ளிவாய்க்கால் நினைவுகளைச் சுமந்து
பிரசுரிக்கபட்ட திகதி: 15/05/2024 (புதன்கிழமை)
மயிலியதனை இந்து மயானத்தில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2024 (திங்கட்கிழமை)
முள்ளிவாய்க்கால் 15 வது ஆண்டு நினைவேந்தல் வாரம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA மாசி மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - பத்மாவதி சுப்ரமணியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
இலவச மரக்கன்றுகள் வழங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jun - 2024>>>
SunMonTueWedThuFriSat
      1
23
4
5
6
78
9
10
11121314
15
161718
19
20
21
22
2324
25
26
272829
30      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai