சைனிங்கஸ் வி.க நடாத்தும் ஒரு நாள் உதைபந்து - ரேவடி, நேதாஜி இன்று மாலை மோதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/10/2014 (சனிக்கிழமை)
சைனிங்கஸ் விளையாட்டுக் கழகம் இன்று 9 நபர் கொண்ட ஒரு நாள் உதைபந்து சுற்றுப் போட்டி ஒன்றை நடாத்துகின்றது. வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு உட்பட்ட கழகங்கள் பங்குபற்றும் 9 நபர் கொண்ட இப் போட்டிகளின் முதல் சுற்றுப் போட்டிகள் வல்வை தீருவில் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றிருந்தன.
இதுவரை நடைபெற்ற போட்டிகளின் விபரம் வருமாறு
நேதாஜி வி.க எதிர் சைனிங்கஸ் வி.க - 1 / 0 வெற்றி - நேதாஜி வி.க
ரேவடி வி.க எதிர் உதயசூரியன் வி.க - 5 / 0 வெற்றி - ரேவடி வி.க
அரையிறுதி
நேதாஜி வி.க எதிர் இளங்கதிர் வி.க - 4 / 0 வெற்றி - நேதாஜி வி.க
ரேவடி வி.க எதிர் தீருவில் வி.க - 3 / 0 வெற்றி - ரேவடி வி.க
இறுதி ஆட்டம்
இறுதி ஆட்டத்தில் ரேவடி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது. குறித்த போட்டி இன்று மாலை 0430 மணிக்கு தீருவில் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.