கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் மின்னொளியில் நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியான 7 நபர் கொண்ட மாபெரும் லீக் முறையிலான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி மீண்டும் நேற்று திங்கள் (25.05.2015) ஆரம்பமாகின்றது.
இரவு 07:00 மணியளவில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறும் நேற்றைய B பிரிவு போட்டியில், முதலாவது ஆட்டமாக உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து இளவாலை யங்கென்றீஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
2 ஆவது ஆட்டத்தில் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 5-1 என்ற கோல் சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.