றெயின்போ VDPL கிரிக்கெட் - றெயின்போ வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது
பிரசுரிக்கபட்ட திகதி: 03/08/2015 (திங்கட்கிழமை)
வல்வை றெயின்போ விளையாட்டுக் கழகத்தினால் VALVAI DOMESTIC PREMIER LEEK PLAY OFF ஆட்டங்களும் இறுதிப் போட்டிகளும் நேற்று றெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இந்த சுற்றுத் தொடரில் 7 அணிகள் பங்கு பற்றிய போதிலும் நான்கு அணிகள் PLAY OFF சுற்றுக்கு தகுதி பெற்றன.
றெயின்போ விளையாட்டுக் கழகம், சைனிங்க்ஸ் விளையாட்டுக் கழகம், நேதாஜி விளையாட்டுக்கழகம், உதயசூரியன் விளையாட்டுக்கழகம் ஆகிய கழகங்கள் PLAY OFF சுற்றுக்கு தகுதி பெற்றன.
இறுதிப் போட்டியில் றெயின்போ விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் றெயின்போ விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இந்த தொடரின் ஆட்ட நாயகன் விருது - பிரசாந் - சைனிங்க்ஸ் விளையாட்டுக் கழகம்
அதிக ஓட்டம் எடுத்த வீரர் - பிரகலாதன் - றெயின்போ விளையாட்டுக் கழகம்
அதிக விக்கெட் எடுத்த வீரர் - ஜெயக்குமார் - சைனிங்க்ஸ் விளையாட்டுக் கழகம்
சிறந்த அனுபவ வீரர் - கிருஷ்ணகுமார் - உதயசூரியன் விளையாட்டுக்கழகம்
வளர்ந்து வரும் இளம் வீரர் - ஜெயகாந் - உதயசூரியன் விளையாட்டுக்கழகம்
அதிக sixer அடித்த வீரர் - பிரகலாதன் - றெயின்போ விளையாட்டுக் கழகம்
இறுதிப் போட்டி நாயகன் விருது - ஜெகன் - றெயின்போ விளையாட்டுக் கழகம்
இந்த சுற்றுத் தொடரில் FAIR PLAY AWARD - உதயசூரியன் விளையாட்டுக்கழகம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.