தமிழர்கள் ஒரு தேசமாக வாழ அங்கீகரிக்கப்பட வேண்டியவர்கள் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/08/2015 (திங்கட்கிழமை)
ஒரு தேசமாக அங்கீகரிக்கப்பட கூடிய இனத்திற்கே சுயநிர்ணய உரிமை உண்டு. அதனடிப்படையிலையே நாம் சுயநிர்ணய அடிப்படையிலையே தீர்வினை கோருகின்றோம். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறை ரேவடி விளையாட்டுக்கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் தேர்தல் பரப்புரை கூட்டமும் இடம்பெற்றது.
அந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஒரு தேசம் அங்கீகரிக்கப்படுவதற்கு நிலப்பரப்பு , தனித்துவமான மொழி, கலாச்சாரம் , மற்றும் பொருளாதாரம் ஆகிய நான்கு முக்கிய விடயங்கள் இருக்க வேண்டும்.
எமது தேசத்தின் அங்கீகாரத்தை சிதைப்பதற்காக தேசத்தின் அங்கீகார அடிப்படை விடயங்கள் மீது திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்த திட்டமிட்ட அழிப்பில் இருந்த அவற்றை தற்காத்து கொள்வதன் ஊடாகவே தமிழ் தேசம் அங்கீகரிக்கப்படும்.அதுவே தமிழ் மக்களின் தீர்வாக இருக்கும்.
எனவே தமிழ் மக்களின் பிரச்சனை என்ன என்பதனை சரியான முறையில் இனம் காணுங்கள்.
சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட கூடிய வகையில் தமிழர்கள் இரு தேசமாக வாழ்வதற்கு அவர்களிடம் பூர்விக நிலம் உண்டு, அவர்களுக்கான தனித்துவமான மொழி உண்டு, தனித்துவமான கலாச்சாரம் உண்டு, மற்றும் பொருளாதாரமும் உண்டு. எனவே நாம் ஒரு தேசமாக வாழ அங்கீகரிக்கப்பட வேண்டியவர்கள். என தெரிவித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.