புனரமைக்கப்பட்டபேரூந்து தரிப்பிடத்தில் பயணிகள் நலன் கருதி படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 19/08/2016 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை சந்தியில் இருந்த பழைய பேரூந்து தரிப்பிடம் தற்பொழுது புனரமைக்கப்பட்டு, அங்கு பயணிகள் நலன் கருதி படிப்பகம் ஒன்று வல்வெட்டித்துறை முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினரால் இன்று திறக்கப்பட்டுள்ளது.
இப் பழைய ஞாபகார்த்த பேரூந்து தரிப்பிடமானது அவர்களின் குடும்பத்தினரால் புனரமைக்கப்பட்டு ஏற்க்கனவே பாவனைக்கு விடப்பட்டிருந்தது. தற்போது இதனை வல்வெட்டித்துறை முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் படிப்பகமாக மாற்றியுள்ளனர். இப்படிப்பகத்தில் தினசரி பத்திரிகைகள் மற்றும் வாராந்த சஞ்சிகைகள் என்பன சேர்க்கப்பட்டுள்ளது.
வல்வை சன சமூக சேவா நிலையமானது புதிய கட்டிடத்தில் இயங்குவதற்கு முன்னர் வல்வை சந்தியில் இக் குறித்த பேரூந்து தரிப்பிடத்திலேயே முன்னர் தினசரி பத்திரிகைகள் வைக்கப்பட்டிருந்தது.
வல்வை சன சமூக சேவா நிலையமானது சந்தியிலுள்ள புதிய மாடிக் கட்டிடத்திற்கு சென்ற பின்னர் முதியவர்கள் மற்றும் பேரூந்திற்காக காத்திருப்போர் நூலகத்தினை பயன்படுத்துவது அரிதாகவே இருந்தது. தற்போது திறக்கப்பட்டுள்ள இப் படிப்பகத்தினூடாக முதியவர்கள் மற்றும் பேரூந்திற்காக காத்திருப்போர் சிறிது நேரமாவது படிப்பகத்தை பயன்படுத்துவது அதிகரிக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு வல்வெட்டித்துறை முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் இதுபோன்ற செயற்ப்பாடுகள் பலராலும் பாராட்டப்படுகின்றமை மேலும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.