ஒவ்வொரு முறையும் புதுமை.அதுவே ரொறண்டோ புளுஸின் சாதனை
பிரசுரிக்கபட்ட திகதி: 26/08/2016 (வெள்ளிக்கிழமை)
கனடாவில் வெளிமைதானத்தில் நடைபெறும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் மிக நீண்ட காலமாக நடைபெற்று வருவதும் அதிகமான கழகங்கள் பங்கு கொள்வதுமான ஒரு போட்டியாக தியாகதீபங்கள் சுற்றுப்போட்டி வருடாவருடம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
பார்வையாளர்களுக்கு நுழைவு கட்டணம் கார் நிறுத்துமிட கடட்டணம் என்று ஏதுமின்றி முழுக்க முழுக்க நினைவு சுமந்த போட்டியாகவே இது நடைபெற்று வருவதை அனைவரும் அறிவீர்கள்.
அத்துடன் பார்வையாளருக்கான உணவுவகைகளும் இலவசமாகவே றொரண்டோ புளுஸ் கழகத்தால் வழங்கப்படுவது புலம்பெயர் தேசங்களில் அரிதிலும்அரிதான ஒரு முயற்சி.நல்ல ஒரு முன்னுதாரணம்.
இம்முறை 2016 ஓகஸ'ட' மாதம் 27ம்திகதி (சனிக்கிழமை) தியாகதீபங்கள் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி வெகு சிறப்பாக உணர்வு கலந்து நடைபெற உள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.