உடுப்பிட்டி அ.மி கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும் நூல் வெளியீடும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2016 (புதன்கிழமை)
உடுப்பிட்டி, அமெரிக்கன் மிஷன் கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும் நூல் வெளியீடும் எதிர்வரும் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினர், பழைய மாணவர்கள் தாய்ச்சங்க அனுசரணையுடன் கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் உடுவை தில்லை நடராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் விசேட விருந்தினர்களாக வட மாகாண சபை பிரதம செயலாளர் ஏ.பத்தி நாதர், வட மாகாண ஆளுநரின் செயலாளர்.எஸ்.இளங்கோவன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளரும் அரச அதிபருமாகிய என்.வேதநாயகன், வட மாகாண கல்வி அமைச்சுச் செயலாளர்.சு.இரவீந்திரன்,வடமாகாண கடற்றொழில், போக்குவரத்து, வர்த்தக, கிராம அபிவிருத்தி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்.எஸ்.சத்தியசீலன், வடமாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார், வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர்.எஸ்.நந்தகுமார், கரவெட்டி பிரதேச செயலாளர்.எஸ்.சிவஸ்ரீ, பருத்தித்துறை பிரதேச செயலாளர் பி.ஆர்.ஜெயசீலன், யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் வண. கலாநிதி டி.எஸ்.சொலமன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
`அமிர்தம்` என்னும் தலைப்பில் கல்லூரியின் கடந்த கால அதிபர்களின் விபரங்கள், ஆசிரியர்களின் புகைப்படங்கள், பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களின் தகவல்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் சாதனைகள் அடங்கிய 200 க்கும் அதிகமான பக்கங்களில் பல வர்ணப்படங்களுடன் ஆவணத்தொகுப்பு நூலும் வெளியிடப்படவுள்ளது.
மேலும் பாடசாலை நலன்விரும்பிகள் மற்றும் தேசிய மட்டத்தில் சாதனை நிகழ்த்திய மாணவர்கள் கௌரவிக்கப்படுவதுடன், இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரியும் கலைஞருமாகிய உடுவை எஸ்.தில்லை நடராஜா எழுதிய பல நூல்கள் மற்றும் அவரால் சேகரித்த நூல்-கள், அவருக்கு கிடைத்த விருதுகள் நினை-வுச்சின்னங்கள் என்பனவும் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி கல்லூரிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.