Valvettiturai.ORG இணையத்தளமமே உனக்கு எனது உளம் நிறைந்த நெடியகாட்டுப்பிள்ளையாரப்பனின் அருளுடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
.
இன்று உனக்கு வயது ஆக ஐந்து மட்டுமே. ஆனால் நீ மேலும் ஜந்நூறு ஆண்டுகள்நலமுடனும் வளமுடனும் வாழ்ந்து எமது தமிழ்த்தாய்க்கு பனிவிடை செய்ய வரம் அருளவேண்டும் என எல்லாம் வல்ல எமது வல்வை நெடியகாட்டுப் பிள்ளையாரப்பனை வேண்டுகிறேன்.
நான் ஒரு ஐந்து வயதுடையவனாக இருக்கும்போது ஒரு அறுபது வயது பெரியவரை வாழ்த்த அழைத்திருந்தால் அது எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்திருக்கும். கண்டிப்பாக மறுத்திருப்பேன்.
ஏனென்றால் ஒரு அறுபது வயதுப்பெரிவரை வாழ்துமளவுக்கு எனக்கு வயதுமில்லை, அறிவுமில்லை தகுதியுமில்லை. இன்று எனக்கு 6௦ வயது. நீ ஒரு சுட்டிப்பயல். நீ ஒரு ஐந்து வயதுப்பாலகன் மாத்திரமே. நீ ஒரு பாலகனாக இருந்தாலும் உன்னை வாழ்த்துவதிலும் அதே தர்மசங்கடநிலையிலேயே நானிருக்கிறேன்.
ஆனாலும் இன்று ஒருவழியாக எனது மனதில் தைரியத்தை வரவழைத்க்கொண்டு உன்னை எனதுமனமார வாழ்த்திவிட்டேன்.
இருந்தாலும் உன்னை வாழ்த்தும் தகுதி எனக்கில்லை.
ஏனென்றால் வயதில் நீ பாலகனாகவும் நான் கிழவனாகவும் இருந்தாலும் அறிவில் நீ ஒரு ஞானக்குழந்தை. தமிழ்த்தாய்க்கு சேவைசெய்யும் மனப்பாங்கில் நீ ஒரு தாயுமானவன்.
பாலமுருகன் தனது தந்தை பரமசிவனுக்கு பிரணவமந்திரத்தை உபதேசித்ததைப் போல தற்போது பழுத்தகிழங்களாக வாழ்ந்துவரும் எமது வல்வையருக்கே எமது வல்வைத்தாயின் அருமைகளையும் பெருமைகளையும்எடுத்தியம்பிய சுவாமிநாதன் நீ.
ஐந்து வயதுப்பாலகனான உனது அருட்கடாட்சரத்தால் எமது வல்வைத்தாயின் எமக்கே தெரியாத பல அருமைகளையும் பெருமைகளையும் அறிந்துகொண்ட கிழடுகட்டைகளில் நானும் ஒருவன்.
அனேகமாக ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் தட்டச்சு செய்வது என்பது மிகவும் சிரமமான ஒரு காரியம் என்றே நான் எண்ணியிருந்தேன்.
ஆனால் நீயோ ஒரு சிறந்த ஆசானாக இருந்து எனக்கு தமிழில் மிகஇலகுவாக தட்டச்சு செய்வது எப்படி என்ற வித்தையை மிகஇலகுவாக போதித்தாய்.
நான் இப்போழுது மிக இலகுவாகவும் அழகாகவும் தமிழில் தட்டச்சில் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு நீ தான்காரணம்.
என்னிடம் உள்ள தமிழ்த்தட்டச்சு அறிவு என்பது நீ எனக்கிட்ட பிச்சை.
அவனருளாலே அவன்தாள் வணங்கி என்று மாணிக்கவாசக சுவாமிகள் சிவபுராணத்திலே சிவனை நோக்கி பாடுவார். அதே போல் நீ எனக்கு புகட்டிய தமிழ்த்தட்டச்சு கலையினாலேயே இன்று இந்த வாழ்த்துமடலை நான் உனக்கு வரைந்துகொண்டிருக்கிறேன்.
நான்மட்டுமல்ல என்னைப்போல் உன்னால் பல பயன்களை அடைந்தோர் ஆயிரம் ஆயிரம்.
இப்பொழுது நீ புரிந்துகொண்டிருப்பாய் உன்னை வாழ்த்தும் தகுதி ஏன்எனக்கு இல்லையென்பதை.
இருந்தாலும் உனது அளப்பரிய சேவை எமது தமிழினத்திற்கு மேலும் தேவை என்ற காரணத்தினால் உன்னை மீண்டுமொரு முறை எனது மனதார வாழ்த்தி உன்னிடமிருந்து தற்காலிகமாக விடைபெறுகிறேன்.
எமது வல்வை நெடியகாட்டுப்பிள்ளையாரப்பனின் அருளுடன் நீ ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி மூங்கில் போல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்ந்திருந்து எமது தமிழ்த்தாய்க்கு சேவை செய்யவேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k,vasanthan (Australia)
Posted Date: October 20, 2016 at 18:42
Hppy 5th Birthday. Congratulations
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.