வல்வை வி.க உதைபந்து - இன்றைய போட்டியில் விண்மீன் B, கரணவாய் மத்தி B வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2017 (வியாழக்கிழமை)
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது.
இன்று நடைபெற்ற போட்டியில் பலாலி விண்மீன் B விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து அல்வாய் மனோகர விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 2:1 என்ற கோல் கணக்கில் பலாலி விண்மீன் B விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.
இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் பொலிகண்டி Smard Boys விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கரணவாய் மத்தி B விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 9:0 என்ற கோல் கணக்கில் கரணவாய் மத்தி B விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.