வருத்தப்படாத வாலிபர் சங்க உதைபந்து - நேற்றைய போட்டியில் நேதாஜி, இளங்கதிர் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2017 (திங்கட்கிழமை)
வல்வை விளையாட்டுக்கழக அனுமதியூடாக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகளை தற்பொழுது நடாத்தி வருகின்றது.
நேற்றைய முதலாவது போட்டியில் சைனின்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் நேதாஜி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில் இளங்கதிர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து உதயசூரியன் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் இளங்கதிர் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.
இன்று Play Off போட்டிகள் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ரெயின்போ விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து உதயசூரியன் விளையாட்டுக்கழகமும், நேதாஜி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இளங்கதிர் விளையாட்டுக்கழகமும் மோதவுள்ளது.
போட்டிகள் தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.