விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை தவிசாளர் கர்ணானந்தராசா ஆகியோர் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். வல்வெட்டித்துறையில் நேற்று (26) கைதுசெய்யப்பட்ட அவர், விசாரணைகளின் பின்னர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சகல பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பில் ஏற்பட்ட முறுகலையடுத்து, வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை தவிசாளர் கர்ணானந்தராசா ஆகியோர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.