டொரோண்டோ ப்ளுஸ் பவுண்டேசனால் கல்வி வளர்ச்சிக்கான முனைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2018 (சனிக்கிழமை)
கனடா டொரோன்டோ டெவலப்மென்ட் பவுண்டேஷன் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சிக்கான உதவிகள் வழங்கப்பட்டது.
1)வானதி (ஒட்டிசுட்டான்,முல்லைத்தீவு) இவர் உயர்தரம் படிக்கிறார் இரண்டு சகோதரர்கள் மாவீரர்கள் தேன்னமுதன் வீரச்சாவு 29.09.1998 இரண்டாவது லெப் தேன்விழி வீரச்சாவு 06.10.2000 இவரின் தாயும் தந்தையும் காலமாகி விட்டார்கள் இவரின் பிரத்தியேக வகுப்புக்காக மாதம் தோரும் 3000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது
2)திருகோணமலை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் அறிவு அவர்களின் மகள் நிதுர்சிகா இவரின் தாயாரும் முன்னாள் போராளி இவர் தரம் 10 படிக்கிறார் இவரின் மாலை வகுப்புக்காக மாதம் தோரும் 3000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
3) மன்னார் பெரியமடு ஈச்சளவக்கவை சேர்ந்த மாணவி த.சோபனா இவருடைய தந்தையும் விடுதலை போரில் வீரகாவியமாகிய மாவீரர் தாயும் இறுதி யுத்தத்தில் இரந்து விட்டார் தற்போது அம்மம்மாவோடு வாழ்ந்து வருகிறார் உயர் தரம் படிக்கிறார்.இவருக்கும் மாதம் தோரும் 3000 ரூபாய் கல்வியை முன்னெடுக்க உதவிப்பணம் வழங்கப்படுகிறது.
4) யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கும் (பலுதூக்கும் போட்டியில் அகில இலங்கை ரீதியாக சந்தித்தவர்) இவர் இந்த ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பல்கலைக்கழக பலுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்தார் இவரின் கல்வி மற்றும் விளையாட்டுக்கான தேவைகளை பொறுப்பெடுத்து மாதம் தோரும் 7000 ரூபாய் வழங்கி வருகிறோம்.
5) சத்திசீலன் சயனா 7ஆம் யுனீட் கல்மடு நகர் வட்டக்கச்சி கிளிநொச்சியை சேர்ந்த யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவியின் பல்கலைக்கழக படிப்பு முடியும் வரை இவருக்கான படிப்பு செலவு மாதம் தோரும் 5000 ரூபாய் வழங்கப்படுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.