8 கோடிக்கு ஆசைப்பட்டு 92 ஆயிரத்தை இழந்த வல்வை அதிபர்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/07/2019 (திங்கட்கிழமை)
8 கோடி ரூபா அதிஸ்டம் கிடைத்துள்ளதாக தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டதை நம்பி வடமராட்சிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் 92 ஆயிரம் ரூபா பணத்தை இழந்துள்ளார்.
கடந்த வியாழகிழமை வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த அதிபர் ஒருவருக்கு முற்பகல் 10 மணியளவில் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஒருவர், உங்களிற்கு கிரிக்கெட் கிண்ணப் போட்டியில் எட்டரைக் கோடி ரூபா அதிஸ்டம் கிடைத்துள்ளது. அதனைப் பெறுவதற்கு நெல்லியடியில் உள்ள கம்மர்சியல் வங்கியில் 92 ஆயிரம் ரூபா பணத்தை வைப்பிலிடுமாறு கூறினார். இதனை நம்பிய அதிபரும் 92 ஆயிரம் ரூபா பணத்தை ஒரு மணித்தியாலத்துக்குள் வைப்பில் இட்டுள்ளார்.
அதன் பின்னர் பிற்பகல் 0 1 3 0 மணியளவில், மீண்டும் தொடர்பு கொண்ட நபர் இன்னும் 2 1/2 லட்சம் ரூபா வைப்பிலிடுமாறு கூறினார். இதனையடுத்து தான் ஏமாற்றம் அடைந்து கொண்டதை தெரிந்து கொண்ட அதிபர் கடந்த வெள்ளிக் கிழமை அது தொடர்பில் நெல்லியடி போலீசில் முறையிட்டுள்ளார்.
அதிஸ்டம் கிடைத்திருப்பதாக வரும் அழைப்புக்களை நம்ப வேண்டாம் என போலீசார் பல முறை பொது மக்களுக்கு அறிவித்தும் மக்கள் ஏமாற்றம் அடைவது கவலை அளிப்பதாக பொலிசார தெரிவித்துள்ளனர்.
மேற்கண்டவாறு நேற்றைய தினக்குரல் பத்த்ரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.