வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 19 வயதுக்கு உட்பட்ட வல்வை விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான மென்பந்தாட்ட துடுப்பாட்டத்தின் இறுதிப்போட்டி நேற்று வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழகத்தில் இடம்பெற்றது.
இறுதியாட்டத்தில் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ரெயின்போ விளையாட்டுக் கழகம் மோதியது. இதில் உதயசூரியன் விளையாட்டுக் கழகம் 11 ஓட்டங்களால் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.
ஆட்ட நாயகன் - வசீகரன் (உதயசூரியன் )
தொடர் நாயகன் - கஜேந்திரன் (உதயசூரியன்)
சிறந்த துடுப்பாட்ட வீரர் - கானகச் செல்வன் (ரெயின்போ)
பார்வையாளர் மனம் கவரந்த வீரர் - உதயசூரியன் (ரெயின்போ)
நன்னடத்தை அணி - நேதாஜி விளையாட்டுக் கழகம்
குறித்த இந்த இறுதிச் சுற்றுப் போட்டி நிறைவில் வல்வை விளையாட்டுக் கழகத்தின் Under 19 கனவு அணி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்துக்கு புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.