வல்வெட்டித்துறை இளைஞர் படகு விபத்தில் கனடாவில் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 04/09/2020 (வெள்ளிக்கிழமை)
கனடா ரொரன்ரோவில் வூட்பைன் பீச்சில் (Woodbine Beach) நேற்று வியாழக்கிழமை மதியம் 12:30 மணியளவில் படகு ஒன்று பாறை ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளான போது வல்வெட்டித்துறை தீருவிலையைச் பிறப்பிடமாகக் கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான பல்லவநம்பி (46வயது) என்பவர் உயிரிளந்துள்ளார்.
இச்சம்பவத்தின் போது 7 தமிழர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் மூவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய மூவர் படகிலிருந்து தூக்கியெறியப்பட்டு நீந்தி கரைசேர்ந்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்றதும் உடனடியாக காவல் துறையினரும் , மருத்துவ அவசரஉதவியும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றதாகவும், மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன. படகு கரையிலிருந்து புறப்பட்டு 5 நிமிட இடைவெளியிலேயே இந்த விபத்து நடைபெற்றதாகவும் படகின் அதிவேகமே விபத்துக்கான காரணமென விபத்தினை பார்வையிட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் என செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.