வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் கோவில் மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/05/2019 (புதன்கிழமை)
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வரும் 9 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
★09.05.2019 வியாழன் : காலை 11 மணிக்கு கொடியேற்றம்
★10.05.2019 வெள்ளி : இரவு கற்பகவிருட்ஷம்
★11.05.2019 சனி : இரவு பூந்தண்டிகை
★12.05.2019 ஞாயிறு : இரவு பாம்புத்திருவிழா
★13.05.2019 திங்கள் : இரவு ரிஷப வாகனம்
★14.05.2019 செவ்வாய் மாலை 06 மணிக்கு வன்னிச்சியம்மன் ஆலயத்தில் வேட்டைத்திருவிழா, இரவு யானை வாகனம்.
★15.05.2019 புதன் : இரவு கைலாஷவாகனம்.
★16.05.2019 வியாழன் : இரவு 07 மணிக்கு சப்பறத்திருவிழா
★17.05.2019 வெள்ளி : தேர்த்திருவிழா காலை 08 மணிக்கு வசந்த மண்டப பூஜை, 09.30 மணிக்கு சுவாமி தேரில் ஆரோகணித்தல், 11.30 மணிக்கு சுவாமி தேரால் அவரோகணித்தல்
★18.05.2019 சனி : அதிகாலை 5.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை, காலை 8.30 மணிக்கு வல்வை ஊறணி சமுத்திரத்தில் தீர்த்தம் ஆடி வல்வை நெடியகாடு பிள்ளையாரை சென்றடைந்து அங்கிருந்து இரவு ஆலயம் நோக்கி புறப்படுவார்.
★19.05.2019 ஞாயிறு : மாலை 04.30 மணிக்கு அரசடி வைரவர் பொங்கல்.
★19.05.2019 திங்கள் : மாலை பூங்காவனம்
★24.05.2019 வெள்ளி : காலை பிராயசித்தஅபிஷேகம் இரவு கற்பூர திருவிழா.
■தினமும் காலை வசந்தமண்டப பூஜை காலை 10 மணிக்கும்.இரவு 07 மணிக்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயமானது வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து தென் கிழக்கு திசையில் சுமார் 800M தொலைவில் உள்ளது.
ஆதினகர்த்தாக்களினால் வெளியிடப்பட்ட வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மகோற்சவ விஞ்ஞாபனம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.