Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

கொடிகாமம் பருத்தித்துறை வீதி (AB31) ஏன் புனரமைக்கப்படவேண்டும்?

பிரசுரிக்கபட்ட திகதி: 01/10/2015 (வியாழக்கிழமை)
கொடிகாமம் பருத்தித்துறை வீதி (AB31) ஏன் புனரமைக்கப்படவேண்டும்?
 
யாழ் தீபகற்பத்தின் பிரதான வீதிகளில் ஒன்றாக அமைந்துள்ளது கொடிகாமம் பருத்தித்துறை வீதி. AB31 எனத் தரப்படுத்தப்பட்டுள்ள இந்த வீதி வடமராட்சியின் மந்திகையிலிருந்து முள்ளிவெளி, வரணி ஊடாக கொடிகாமம் வரை நீள்கின்றது.
 
வடமராட்சியில் இந்த வீதியின் தொடர்ச்சியாக - மந்திகையிலிருந்து பருத்தித்துறை வரை யாழ் – பருத்தித்துறை வீதியும் (AB20), தென்மராட்சியில் இந்த வீதியின் தொடர்ச்சியாக - கொடிகாமத்திலிருந்து கச்சாய் (B68) வீதியும் அமைந்துள்ளன. அதாவது முன்னர் யாழின் துறைமுகங்களாக விளங்கிய பருத்தித்துறை மற்றும் கச்சாய் துறைமுகங்களை இணைக்கின்றது இந்த வீதி.
 
கச்சாய் - கொடிகாமம் - AB 31 வீதி 

 
கச்சாய்
கச்சாய் என்னும் பண்டைய சிறிய துறைமுகம் முன்னர் உள்ளூர் உற்பத்தியாக மரக்கறி வகைகள், மீன்பிடித் தொழில் பொருட்கள் மற்றும் வடகீழ் பருவப் பெயர்சிக் காலநிலையின் போது வள்ளங்களை பாதுகாப்பாகத் கட்டி வைக்க கூடிய இடமாக (Protected shelter) இருந்தமையால் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
 
இதர யாழின் பண்டைய துறைமுகங்களான பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு, காங்கேசன்துறை மற்றும் ஊர்காவற்துறைகளுக்கு இருந்த அதே முக்கியத்துவத்தை கச்சாயும் பெற்றிருந்தது.
 
AB31 - மந்திகை – கொடிகாமம் வீதி
பருத்தித்துறை தொடக்கம் கச்சாய் வரையான வீதியின் மொத்த நீளம் 18.91 கிலோ மீட்டர் ஆகும். இலங்கையில் உள்ள AB தர வீதிகளில் 10 ஆவது நீளமான வீதி இதுவாகும். 
 
இலங்கையில் மொத்தம் 45 AB தர வீதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வீதிகள் ஏற்கனவே திருத்தப்பட்டு விட்டன.
இந்த AB31 வீதியின் பராமிப்பு பருத்தித்துறை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கீழ் உள்ளது.
 
Highway Number Route   Length(km)
AB044 Mahiyangana - Dimbulagala - Dalukkane 72.60
AB021 Jaffna - Ponnalai - Point Pedro 55.38
AB020 Jaffna - Point Pedro 33.79
AB017 Jaffna - Manipay - Karainagar 27.21
AB010 Colombo - Hanwella Low Level Road 24.94
AB039 Valukkairaru - Pungudutivu - Kurikadduwan 24.54
AB001 Ampara - Inginiyagala 19.79
AB029 Pasyala - Giriulla 19.31
AB019 Jaffna - Pannai - Kayts 19.31
AB031 Puloly - Kodikamam - Kachchai 18.91
AB016 Jaffna - Kankesanturai 18.50
AB018 Jaffna - Palali 17.30
AB032 Puttur - Meesalai 13.68
     
                             
AB31 தென்மராட்சியையும் வடமராட்சியையும் இணைக்கும் பிரதான பாதையாக விளங்குகின்றது. வடமராட்சியின் தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி, பருத்தித்துறை மற்றும் நெல்லியடி, கற்கோவளம் ஆகிய பிரதான ஊர்களினது மக்களினது தென்மராட்சிக்கான அதிலும் குறிப்பாக கொடிகாமம் அல்லது A9 நெடுஞ்சாலைக்கான பிரதான போக்குவரத்துப் பாதையாக இது அமைந்துள்ளது.
 
இந்த வீதியை பயன் படுத்துபவர்களை இவ்வாறு சிலவாறு வகைப்படுத்தலாம்
 
1) யாழின் குறிப்பிடக்கூடிய மரக்கறிச் சந்தைகளில் ஒன்றான கொடிகாமத்திற்கு வியாபார நோக்கில் செல்வோர்
2) தலைநகர் செல்வதற்காக கொடிகாமம் புகையிரத நிலையம் செல்வோர் அல்லது கொழும்பிலிருந்து புகையிரதத்தில் வந்து – வடமராட்சி மற்றும் தென்மராட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்குச் செல்வோர் 
3) வன்னி – வடமராட்சி – ஒரு பகுதி தென்மராட்சி மக்களின் போக்குவரத்து மற்றும் பண்டமாற்று 
4) வடமராட்சி மற்றும் ஒரு பகுதி தென்மராட்சி மக்களின் அரச உத்தியோகங்கள் நிமித்தமான அன்றாடப் போக்குவரத்து 
5) வடமராட்சி மற்றும் ஒரு பகுதி தென்மராட்சி மக்களின் தலைநகர் உட்பட்ட இலங்கையின் பிரதான நிலப்பரப்பின் பகுதிகளுக்கான போக்குவரத்து
 
வீதியின் இன்றையநிலை :
 
இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த வீதி இன்று யாழில் அதிகம் பேசப்படும் ஒரு வீதியாகவும் அமைந்துள்ளது - காரணம் பல வருடங்களாக திருத்தப்படாமலும் இன்றைய தேவைக்கேற்ப அகலப்படுத்தப்படாமல் உள்ள அவலத்தால்.
 
 
குறைபாடுகள் சில:
 
குன்றும் குழியுமாக உள்ளமை 
பாதையின் ஓரங்கள் வெட்டுக்கள் உடைவுகளுடன் உள்ளமை
மிகவும் ஒடுக்கமாக உள்ளமை
சில இடங்களில், வீதி ஒரு அலையின் வடிவை ஒத்து அமைந்துள்ளமை (Bumping)
உரிய வீதி சமிக்ககைகள் இன்மை 
உரிய வீதித் தரவுகள் இன்மை ........ இவ்வாறாக நீள்கின்றது
 
திருத்தப்படாமையால் உள்ள பிரதிகூலங்கள்:
 
விபத்துக்கள் 
நேரம் விரயம்
அசெளகரியங்கள் 
மாற்றுப்பாதைக்குச் செல்லுதல் (புத்தூர் சந்தி – புத்தூர் வழியாக தென்மராட்சியிலிருந்து வலிகாமக் சென்று பின்னர் வடமராட்சிக்கு வருதல்) 
சந்தைப்படுத்தலில் இடைஞ்சல் 
தலைக்கு மேல் உள்ள மரங்களால் (Over head trees) உள்ள ஆபத்துக்கள் 
உடல் உபாதைகள்.......... இவ்வாறாக நீள்கின்றது.
 
அரசியல் தலையீடு 
 
குறித்த இந்த வீதியை திருத்துவதற்கென ஒதுக்கப்பட்ட நிதி முன்னைய ஆட்சி காலத்தில் அரசியல் தலையீட்டால் வேறு பகுதிக்குச் சென்றதாக சொல்லப்படுகின்றது. ஆனாலும் இது உறுதிப்படுத்தபடாத செய்தி.
 
வீதி புனரமைக்கப்படாமைக்கு பிரதான காரணங்களில் ஒன்று இந்த வீதியில் உள்ள ‘மக்கள் பாவனை’ (Traffic vollume) குறைவு என்று ஒரு வாதம் உள்ளதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஏனெனில் மக்கள் பாவனை வெறும் சொற்பமே உள்ள முல்லைத்தீவு கொக்கிளாய் வீதி ‘காப்பற் வீதியாக’ மாற்றப்பட்டுள்ளதை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். 
 
கோரிக்கைகள் 
 
இப்பாதைப் புனரமைப்பின் அவசியத்தை வலியுறித்தி பொதுமக்கள், ஸ்தாபனங்கள், பார ஊர்திச் சங்கங்கள் போன்றவற்றால் அவ்வப்போது கோரிக்கை விடுக்கப்பட்டுவந்துள்ளதுதான். ஆனாலும் இவை உரியவர்களின் கவனத்தைப் பெற்றதாகத் தெரியவில்லை.
 
முகநூல் (FACEBOOK)
 
அண்மையில் இந்த வீதியின் அவலத்தை மேலும் வெளிக் கொணரும் நோக்கில் கீழ்வரும் முகநூல் பக்கம் ஒன்றை ஆரம்பிக்க, அது இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை சென்றடைந்துள்ளமை – இந்த வீதி புனரமைக்கப்படவேண்டிய அவசியத்தியே வலியுறுத்தி நிற்கின்றது.
 
https://www.facebook.com/Highway-AB31-Puloly-Kodikamam-K…/…/
 
அடுத்த நடவடிக்கை:
 
எவ்வாறாயினும் இந்தப் பாதை உடனடியாக புனரமைக்கப்படவேண்டும். இதற்கு எல்லா தென்மராட்சி/வடமராட்சியில் உள்ள மக்கள் அமைப்புக்கள் ஒவ்வொன்றும் எமது மக்கள் படும் கஷ்டங்களை கடிதம் மூலம் letterhead ல் பதிந்து பின்வரும் email முகவரிக்கு அனுப்பவும். இச் செயலால் எம் உறவுகள் தான் பலாபலனை அனுபவிப்பார்கள்!
HAZZAMAN2302@GMAIL.COM.
 
Courtsy - www.facebook.com/Highway-AB31-Puloly-Kodikamam-Kachchai-Road

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
S.sivanesan (Srilanka) Posted Date: October 02, 2015 at 19:23 
It is very imperative, that this road should be widened and repaired according to modern standards.the present condition is worse than before 50 years.


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
மரண அறிவித்தல் - சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2024 (செவ்வாய்க்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
குரோதி வருடப்பிறப்பு புண்ணிய கால விசேட பூசைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2024 (சனிக்கிழமை)
க.பொ.த உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2024 (வெள்ளிக்கிழமை)
Toronto ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2024 (வியாழக்கிழமை)
வல்வை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
5ம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் முத்துக்குமாரு தங்கவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
சேவை நலன் பாராட்டுக்கள் மடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
பூரண சூரிய கிரகணம் - நாசாவின் படங்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - வீடு நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் திரு வைத்தியலிங்கம் சிவகுகதாசன் (ஒய்வுநிலை அதிபர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
பண்ணிசை, நடனக்கான வளவாளர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
அனலைதீவில் சூரிய ஒளி காற்றாலை மின்சார உற்பத்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2024 (வெள்ளிக்கிழமை)
பெண்கள் தனியாக பயணிக்க முதலாவது நாடாக இலங்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
முள்ளிவாய்க்கால், வல்வெட்டித்துறை போன்ற சொற்களை கூட உச்சரிக்க முடியாத நிலையில் நாம் உள்ளோம் - பேராசிரியர் ரகுராம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
திருக்குறள் கருங்கல்லில் பதிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப் பயிற்சியும் கற்றல் பயிற்சியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
அ.மி.த.கலவன் பாடசாலையில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 03/04/2024 (புதன்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai