பிரித்தானியாவில் Mitcham பகுதியில் வல்வையர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் Mortimer Road இல் சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்க அலுவலகம் உள்ள வீட்டில் 26/10/2016 புதன்கிழமை இரவு கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் உறவினருடைய மரண வீட்டுக்கு சென்றிருந்த வேளை பின்புற யன்னல் உடைக்கப்பட்டு அங்கிருந்த மடிக் கணனிகள் (Laptops) திருடப்பட்டுள்ளன.
கடந்த சில வருடங்களில் வல்வையுடன் சம்பந்தப்பட்ட Laptop திருட்டுச்சம்பவம் இது இரண்டாவது தடவை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. கடந்த 2013 ஆம் ஆண்டு, வல்வையில் வல்வை முன்னாள் நகரசபைத் தலைவர் வீட்டிலும் வீடு உடைக்கப்பட்டு அவரின் Laptop திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.